வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மாநில கல்விக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. அதில் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்திற்கு நீதியரசர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
அதாவது மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பெற்றோர்கள் சார்பாக தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இருப்பதால் தான் அதிக கட்டணம் செலுத்தி பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். எனவே இனி தமிழகத்தில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த அரசு அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.