Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, ரஜினியை போலவே இருக்கிறாரே….!” பாகிஸ்தானை சேர்ந்த நபரின் வீடியோ வைரல்….!!!!!!

ரஜினியை போலவே பாகிஸ்தானை சேர்ந்த நபர் இருக்கின்றார்.

சூப்பர் ஸ்டாரானா ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்ற நிலையில் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கின்றது. இப்படம் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினியை போலவே இருக்கும் நபரின் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. பாகிஸ்தானை சேர்ந்த ரெஹ்மத் கஸ்காரி என்ற நபர் ரஜினியை போலவே இருக்கின்றார். இவர் தற்போது அரசு வேலையில் தாசில்தாராக பணியாற்றி வருகின்றாராம்.

இவர் வேட்டைக்குச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை முகநூலில் வெளியிட்டால் ரஜினியை போலவே ஸ்டைலாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்கின்றார்களாம். ரஜினியை நேரில் சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என அந்த பேட்டியில் அவர் தனது ஆசையை கூறியுள்ளார்.

Categories

Tech |