Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் ஒழுங்கா வேலை பாக்குறாங்களா?…. மாறு வேடத்தில் எஸ்.பிஐ செய்த செயல்…. ஷாக்கான போலீசார்…..!!!!!

உத்திரபிரதேசம் ஆவுரய்யா மாவட்டத்தின் எஸ்பியாக, பெண் ஐபிஎஸ் அதிகாரி சாருநிகம் பதவிவகித்து வருகிறார். இவர் பொதுமக்களின் புகார்கள் மீது காவல்துறையினர் எவ்வளவு துரிதமாக செயல்படுகின்றனர் என்பதை அறிய சுவாரஸ்யமான நடைமுறையை கையாள திட்டமிட்டார். அந்த வகையில் சாருநிகம், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை அழைத்து தனது பெயர் சரிதா சவுஹான் எனவும் ஆவுரய்யா மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தன்னை வழிமறித்த நபர்கள் ஆயுதத்தை காட்டி கொள்ளையடித்து சென்றதாகவும் புகாரளித்தார்.

இதையடுத்து அவர் இருக்கும் இடத்தை கேட்டறிந்த காவல்துறையினர் 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு, ஐபிஎஸ் அதிகாரி சாருநிகம், தலையில் துப்பட்டா சுற்றி முக கவசம் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து அடையாளம் தெரியாத அடிப்படையில் நின்றுகொண்டிருந்தார். தன்னை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துசென்றதாக ஐபிஎஸ் அதிகாரி சாருநிகம் கதறி அழுதார். பின் விவரங்களை கேட்டறிந்த காவல்துறையினர், அப்பகுதியில் சென்ற வாகனங்களை 1 மணி நேரம் சோதனையிட்டனர்.

அதுவரை அழுது புலம்பியபடி இருந்த சாருநிகம், ஒருக்கட்டத்தில் தன் முகக்கவசம் மற்றும் துப்பட்டாவை அகற்றினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தன் உயரதிகாரிக்கு சல்யூட் அடித்தனர். அதனை தொடர்ந்து மிகவும் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை அவர் வெகுவாக பாராட்டினார். இச்சம்பவம் தொடர்பான “வீடியோ” சமூகவலைதளங்களில் பரவி மக்களின் பாராட்டுகளையும் குவித்துவருகிறது.

Categories

Tech |