Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேண்டாம்… என்ன விட்டுடு… மறுத்த கல்லூரி மாணவி… வலுக்கட்டாயமாக இளைஞன் எடுத்த செல்பியால் ஏற்பட்ட சோகம்.!

செங்கல்பட்டில் காதலிக்காததால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞனால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் மோனிஷா. 22 வயதுடைய இவர் அரசு கல்லூரியில் படித்து வருகின்றார். மோனிஷாவின் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான். அதுமட்டுமில்லாமல் இவன் நாள்தோறும் மோனிஷா கல்லூரிக்கு செல்லும் நேரத்தில், தன்னை காதலிக்க வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி வந்துள்ளான்.

எவ்வளவுதான் கட்டாயப்படுத்தினாலும் மாணவி வேண்டாம் என்ன விட்டுடு என்று இளைஞனின் காதலை மறுத்தே வந்துள்ளார். அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒருநாள் அந்த இளைஞன் அந்த மாணவியின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து, ஒன்றாக இருப்பது போல செல்பி எடுத்து விட்டான்.

இதையடுத்து என்னை மட்டும் நீ காதலிக்காவிட்டால், இந்த  புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என மோனிஷாவை மிரட்டி இருக்கிறான். அதைத் தொடர்ந்து, பயந்து போன மாணவி தனது மாமாவிடம் கூட நடந்ததை சொல்லாமலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் மன வேதனையடைந்த மோனிஷா இளைஞனின் காதல் தொல்லை தொடர்பாக ஒரு கடிதம் எழுதி விட்டு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |