சேலம் மாவட்டத்தில் உள்ள லீபஜார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க பாதையில் நடந்த சென்ற போது முதியவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories