விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் நவ.15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு டிச.15ஆம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.