வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் முதல் பாடலாக ‘ரஞ்சிதமே’ என்ற குத்து பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நீண்ட நாள் கழித்து விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியானதை அடுத்து, இந்த நாளுக்காகத்தான் தான் நெடுங்காலமாக காத்திருந்ததாக இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், நீங்க மாஸ் அண்ணா, உங்களுக்காக பண்ண எங்களோட சின்ன மியூசிக்கல் சம்பவம் இது. லவ் யூ அண்ணா என்று அன்பு மழையை பெய்துள்ளார் தமன்..