நடிகர் ஷாருக்கான் பாலிவுட் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுவார். இவர் அடிக்கடி தனது டிவிட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் பேசியிருந்தார். அப்போது நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதாவது நீங்களும் விஜய்யும் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது தெரிகிறது, நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது.
இதனை அடுத்து நீங்கள் எப்போது இருவரும் இணைந்து நடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான் அவர் உண்மையிலேயே ரொம்ப கூல்… படங்கள் எப்போது நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதுதான் நடக்கும்… அவர்கள் வேண்டும் என்றால் அவர்கள் செய்வார்கள்… என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய், ஷாருக்கானின் “ஜவான்” படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யும் ஷாருக்கானும் ஒன்றாக இணைந்து இருக்கும் போட்டோக்கள் வெளியானது. பின்னர் அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.