உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது.
உலக அளவில் படம் பாராட்டைப் பெற்றுவரும் நிலையில் கல்கியின் அறக்கட்டளைக்கு 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது படக்குழு. லைகா ப்ரொடெக்ஷன், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் மணிரத்னம் அனைவரும் இணைந்து நன்கொடை வழங்கியுள்ளனர். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.