Bsnl நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. அது மட்டும் இன்றி பண்டிகை கால சலுகைகளையும் வழங்கி வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். அந்தவகையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.775க்கு 150 Mbps வேகத்தில் தினமும் 2000 ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இத்துடன் முக்கிய ஓடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.775 பிராட்பேண்ட் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நவம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமீபத்தில் ரூ.275 மதிப்புள்ள ஃபைபர் திட்டத்தையும் பிஎஸ்என்எல் நீக்கியது குறிப்பிடத்தக்கது.