Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் இனி சிலிண்டர் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பரான சலுகை….!!!!

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது 70 ரூபாய் கேஷ்பேக் வெல்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பேமென்ட் வசதியை வழங்கும் பஜாஜ் பின்சர்வ் ஆப் மூலம் மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ்,பில் பேமண்ட்களில் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் கேஷ் பேக் பெறலாம் . இந்த செயலி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் மூலம் இயங்கி வருவதால் சிலிண்டர் புக்கிங் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகிறது.

இதில் நீங்கள் அதிகபட்சமாக 70 ரூபாய் கேஷ்பேக் பெற முடியும். கேஷ் பேக் பெறுவதற்கு நீங்கள் பஜாஜ் பே யுபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். இதற்கு முதலில் உங்கள் பஜாஜ் பின்சர்வ் செயலியை திறக்க வேண்டும். பின்னர் எல்பிஜி கேஸ் என்பதை அதில் கிளிக் செய்து select provider என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் எல்பிஜி ஆப்ஷன் வரும்.அதில் உங்கள் சேவை வழங்குனரை தேர்ந்தெடுத்து உங்கள் நுகர்வோர் எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது முன்பதிவுத் தொகை எவ்வளவு என்பது தோற்றுவிக்கப்பட்ட உடன் நீங்கள் முன் பதிவு தொகையை செலுத்த வேண்டும். இறுதியாக பத்து சதவீத கேஷ்பேக் பெறுவதற்கு பேமெண்ட் முறையில் யுபிஐ உடன் பஜாஜ் பே என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Categories

Tech |