விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி எலிமினேட் ஆனார். கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நாமினேஷனில் அஷிம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன், விக்ரம் ஆகியோ லிஸ்டில் இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கான உறுதியான தகவல் தற்போது வந்து இருக்கிறது. அதாவது அவரை கடந்த வாரமே கமல் விமர்சித்து இருந்த நிலையிலும் ஷெரினா தொடர்ந்து பலமுறை மலையாளம் பேசி வந்தார். மேலும் ஷெரினா போட்டிகளில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர்.