வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக கூடும் என்பதால் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.