Categories
மாநில செய்திகள்

சென்னை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு… போலீசார் தீவிர விசாரணை!

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில்நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் உள்ள கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜ் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகிறார். அதில் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் எதிர்புறம் இருக்கும் நபர் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசிய காட்சி பதிவாகியுள்ளது.

எதிரே உள்ள நபர்கள் மீது வீசிய அந்த வெடிகுண்டு அவர்கள் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது தெரிய வந்தது. அந்த மர்ம நபர்கள் யார் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசினார்கள்? என்பது குறித்து தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வீசிட நபர்களை கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி வீடியோவில் வெடிகுண்டை வீசியது யார் என்பது தெரிந்துவிட்டதாகவும், அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Categories

Tech |