வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் வருகின்ற 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்காக 1149 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 899 தமிழக பேரிடர் மீட்பு படையினர் என்று மொத்தம் 2048 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 593 நிவாரண முகங்கள் தயாராக உள்ளது.
மேலும் இதுவரை 1070 என்ற இலவச தொலைபேசி மூலம் 394 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 244 குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது. 150 பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளது குறித்து சென்னையில் மட்டும் 206 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 132 அமைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். கன மழையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வரும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஒரே நாளில் 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.140 குடிசைகள் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 17 கண்காணிப்பு அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலகளாக 43 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு கண்காணிப்பு அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் விழுந்த 65 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் நீரை வெளியேற்ற 763 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளது. மழை நீர் தேங்கிய இடங்களில் 250 மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 179 நிவாரணம் முகாம் தயாராக உள்ளது. அவற்றின் 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் தேங்கி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 ஆம் தேதி காலை 23,838 உணவு போட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.