Categories
தேசிய செய்திகள்

PF இருப்புத்தொகை…. சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்….!!!!

உங்களது யுஏஎன் மூலம் இபிஎப்ஓ வலைதளத்தில் பிஎப் இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது என்ற வழிமுறைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

# இபிஎப்ஓ-ன் அதிகாரப்பூர்வமான வலைதளத்துக்குச் சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும்.

# தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# பின் “Member Passbook” எனும் ஆப்ஷனை க்ளிக்செய்யவும்.

# அப்போது வரும் புது பக்கத்தில் உங்களுடைய யுஏஎன் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அதை உள்ளீடு செய்தபின் காட்டப்படும் கேப்ச்சா கேள்விக்கு பதிலளித்தப் பிறகு Login பட்டனை அழுத்தவேண்டும்.

# ஒரு முறை நீங்கள் EPF முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்ததும், அவற்றில் உங்களுடைய பெயர், UAN எண் மற்றும் PAN எண் போன்றவை காண்பிக்கப்படும்.

# தற்போது நீங்கள் உங்களது ஒரு Member IDயை தேர்ந்தெடுக்கவும்.

# இதையடுத்து கீழே வரும் பல ஆப்ஷன்கள் வாயிலாக உங்களது பிஎப் இருப்பைச் சரிபார்க்க இயலும். இப்போது நீங்கள் உங்களது பிஃப் கணக்கில் உள்ள இருப்பை பார்க்க முடியும்.

மொபைல் எண் வாயிலாக பிஎஃப் இருப்பு சரிபார்த்தல்

# எஸ்எம்எஸ் வாயிலாக உங்களது பிஎஃப் இருப்புத்தொகையை அறிந்துகொள்ள 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவேண்டும். அவற்றில் EPFOHO UANENG என்று டைப் செய்து அனுப்பவும்.

மிஸ்டு கால் வாயிலாக பிஎஃப் இருப்பு 

# அதாவது, 011-22901406 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் வாயிலாகவும் உங்களது பிஎப் இருப்புத்தொகையை அறிந்துகொள்ள இயலும்.

EPFOன் m-Sewa செயலி

# உங்கள் மொபைலில் m-Sewa செயலியை தரவிறக்கம் செய்து, அவற்றில் Member என்பதற்குள் சென்று Balance/Passbook என்பதை அழுத்தி உங்களின் EPF இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Umang செயலி

# உங்கள் மொபைலில் உமாங்செயலியை பதிவிறக்கம் செய்ததும், Employee Centric Services என்பதற்கு கீழ்உள்ள EPFO ஆப்ஷனுக்குச் சென்று EPF இருப்பை சரிபார்க்கலாம்.

Categories

Tech |