Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “ஐப்பசி மாதத்தில்”…. நடிகை நயன்தாரா செய்த காரியம்…. என்னென்ன நீங்களே பாருங்க…!!!

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

நடிகை நயன்தாரா கடந்த 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார். இவர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக “ஜவான்” படத்தில் நடித்துள்ளார். இந்தப் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தாய்லாந்து, ஸ்பெயின், துபாய் என ஹனிமூனை கொண்டாடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி இரட்டை மகன்களுக்கு பெற்றோர் ஆகியிருப்பதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருமணமாகி 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் சட்ட விதிகளை மீறி அவர்கள் செயல்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதால் சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. அதில் நயன்தாரா விக்கி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். அதாவது மஞ்சள் கயிறுடன் இருந்து வந்த நம்ம நடிகை நயன்தாரா தற்போது தாலி பிரித்து கோர்த்து செயினில் போட்டுள்ளார். நெற்றியில் குங்குமம் கழுத்தில் தாலி செயின் என புதிய கெட்டப்பில் உள்ளார் நம்ம நயன்தாரா. மேலும் புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நயன்தாரா தாலியை கழட்ட முடியாது என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |