Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சைக்காக அவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் அவரின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த போது வைரப்பனின் மனைவி ஜெயலட்சுமி தனது கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக சந்தேகம் எழுப்பி இருக்கின்றார். இதன் பின் ஜெயலட்சுமி சித்தப்பா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வைரப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று வைரப்பன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டபோது அவரின் அண்ணன் வேலப்பனுடன் கைகலப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

அப்போது வைரப்பன் கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி வேலப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |