ஹெல்மெட் போடாமல் சாலைவிதிகளை மீறியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்ததையடுத்து இன்றய விசாரணையில் போலீஸார் பல்வேறு முக்கிய தகவலை கொடுத்துள்ளனர். ஹெல்மெட் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த ஆவணத்தை தாக்கல் செய்தனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.
குறிப்பாக காவல்துறை அளித்த தகவலில் கடந்த 2018 நவம்பர் முதல் 2019 நவம்பர் வரை ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 69.90 லட்சம் பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 15.1 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 2018ம் ஆண்டை காட்டிலும் 38 சதவீதம் குறைந்துள்ளது தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.