ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.