Categories
சினிமா தமிழ் சினிமா

#Varisu-Ranjidhame…! இந்த பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன்பா…. இசையமைப்பாளரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ரஞ்சிதமே பாடலை ரீமிக்ஸ் வெர்ஷன் என கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் ரஞ்சிதமே பாடலின் இறுதியில் வருவது மொச்சை கொட்ட பல்லழகி பாடல் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். நெட்டிசன்ஸ் இதற்கு இது நம்ம மொச்ச கொட்ட பல்லழகி ரீமிக்ஸ் வெர்சன்பா என ட்ரோல் செய்து வருகின்றார்கள். இதுபோல ட்விட்டரில் பலர் இந்த வீடியோவுடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் தமனை விளாசி வருகின்றார்கள்.

Categories

Tech |