தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம்.
இந்த நூல் பார்ப்பனர்கள் அல்லாதவர்களை சூத்திரர்கள் என்று சொல்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் மற்றும் கலாச்சார கொள்கையாக மனுஸ்மிருதி நூலை தான் கொண்டிருக்கிறது. இந்த நூலின் அடிப்படை கருத்து சமூக நீதி வேண்டாம் மற்றும் சகோதரத்துவம் வேண்டாம் என்பதுதான். இதைத்தான் அரசியலமைப்பு சட்டமாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
பார்ப்பனர்கள் அல்லாத நான்கு வர்ணங்களை சேர்ந்த 50 விழுக்காடு பெண்களை சூத்திரர்களாக வழிநடத்த வேண்டும் என்பதுதான் அந்த நூலின் கோட்பாடு. மேலும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக நூல் விநியோகிக்கப்படுகிறது என்று கூறினார்.