Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா பகுதியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு வாராந்திர சிறப்பு ரயிலானது நவம்பர் 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வாரந்தோறும் திங்கட்கிழமை தினத்தன்று இயக்கப்படும்.

இந்நிலையில் விஜயபுரா பகுதியில் இருந்து இரவு 11 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் நள்ளிரவு 2.20 மணியளவில் கோட்டயம் பகுதியை சென்றடையும். இந்த ரயில் பாகல் கோட் ஹூப்ளி, எலகங்கா, எர்ணாகுளம், பாலக்கோடு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் மாலை 5.22 மணிக்கு சேலத்தை சென்றடைந்து அங்கு 3 நிமிடங்கள் நின்று விட்டு பின் 5.25 மணி அளவில் புறப்பட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 6.20 மணிக்கு, திருப்பூருக்கு 6.20 மணிக்கும், கோவைக்கு 8.20 மணிக்கும், பாலக்காடுக்கு 9.35 மணிக்கும் சென்றடையும்.

இதேபோன்று கோட்டயம் பகுதியில் இருந்து விஜயபராவுக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் இயக்கப்படும். இதனையடுத்து கோட்டயம் பகுதியில் இருந்து பிற்பகல் 3:30 மணியளவில் புறப்படும் ரயில், எர்ணாகுளத்துக்கு மாலை 5.10 மணிக்கும், திருச்சூருக்கு 6.27 மணிக்கும், பாலக்காட்டுக்கு 9.37 மணிக்கும், கோவைக்கு இரவு 11.17 மணிக்கும், திருப்பூருக்கு நள்ளிரவு 12.3 மணிக்கும், ஈரோட்டிற்கு 12.50 மணிக்கும், சேலத்திற்கு 1:47 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்துக்கு அதிகாலை 5.38 மணிக்கும் சென்று இரவு 8.30 மணி அளவில் விஜயபுரா பகுதியை சென்றடைகிறது.

இந்த ரயில் நவம்பர் 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 மற்றும் ஜனவரி 4, 11, 18 ஆகிய தினங்களில் இயக்கப்படும். மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பயணிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |