சீக்கியர்களின் மதகுருவான குருநானக் என்பவரின் பிறந்தநாள் வருகின்ற 8 தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருதுவாராவில் சீக்கியர்கள் வழிபாடு செய்ய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று கராய்ச்சியில் இருந்து நங்கனா சாஹிப் நகருக்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்ட சென்றது.
இதில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் ஷார் கோட் மற்றும் பீர் மஹால் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி வெளியே சென்று கவிழ்ந்துள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றது.