பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது சுவாரசியம் மிக்க தகவல்களையும், வியக்கத்தக்க செயல்களையும் தன் டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்று விட்டதை மெய்பிக்கும் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு நிகழ்வை சுட்டிக்காடி ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். அதாவது உத்தரகாண்ட்டின் மலைக் கிராம் ஒன்றில் உள்ள டீக்கடையில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து “இந்தியாவின் கடைசி டீக்கடை” என்று டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டி இருக்கிறார். அத்துடன் ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். இந்த புகைப்படம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பின் வளர்ச்சியையும், பாய்ச்சலையும் காட்டுகிறது என்றும் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.