நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வகிக்களை சந்தித்து பேசினார். நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து இருந்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு முறை சந்தித்தார். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவருடைய நிலைபாட்டை மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தினார்.
அதன் பிறகு மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கவே இல்லை. அது மட்டும் இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்தினார். ரஜினி மக்கள் மன்றத்தின் பணியை நிறுத்திவிட்டு உங்களுடைய வேலையை பாருங்கள். உங்களை அடுத்து அழைக்கும் போது அடுத்த கட்ட பணிகள் குறித்து முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு நிர்வாகிகளை சந்திக்காமல் இருந்த ரஜினி நாளை மறுநாள் ரசிகர்களை சந்திக்கின்றார்.
இது அவர் அரசியல் அறிவிப்பை அறிவித்த பிறகு மூன்றாவது சந்திப்பு ஆகும். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகின்றது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகின்றது.