சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங்கின் 115-வது பிறந்தநாள் செப்டம்பர் 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதேநாளில் சண்டிகர் விமானம் நிலையத்திற்கு பகத்சிங்கின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் நினைவாக சண்டிகர் விமானம் நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று செப்டம்பர் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து கடந்த வாரம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அவற்றில், சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு “ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம், சண்டிகர்” என சூட்டப்பட்டது. இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களின் பெயர் மற்றும் மறு பெயரிடுவதில் விரிவான செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதற்குரிய இறுதி ஒப்புதல் மத்திய அமைச்சரவையிலிருந்து வரவேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சண்டிகர் விமானம் நிலையத்திற்கு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.