லண்டனை சேர்ந்த டேனியல் எமிலின் இணையதளத்தில் தற்கொலை எண்ணத்தை தூண்டும் தாவரத்தினை தேடி ஆர்டர் செய்து வாங்கி வளர்த்து வருகிறார். ஜிம்பி ஜிம்பி என்று அழைக்கப்படும் அந்த செடியை அவர் வளர்த்து வருகிறார். இந்த செடியின் இலைகள் மீது சிறிய செய்யும் முட்கள் இருக்கும். இது மனிதர்களின் உடலில் பட்டதும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதைத் தொட்டாலே உடலில் மிகவும் கடுமையான வலி ஏற்பட்டு பல மாதங்களுக்கு இதனால் ஏற்பட்ட வீக்கமும், வலியும் அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது நரம்பு மண்டலத்தை பாதிக்குமாம். இது குறித்து டானியல் எம்லின் கூறுகையில், செடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. சாதாரண செடிகளை வளர்த்து போர் அடித்து விட்டது. எனவே இந்த ஆபத்தான செடியை இணையதளத்தில் தேடி ஆர்டர் செய்து வாங்கி வளர்த்து வருகிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.