Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அமைதியை யாராலும் சீர்குலைக்க முடியாது…. அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்….!!!!

அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள பட்டாளம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். . அதில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நமது சென்னை மாநகரம் 100% இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி அதிக அளவு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை  நமது மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து  எடுத்து வருகிறது. மேலும் மழைக்காலத்தில் பள்ளங்கள் ஏற்பட்ட அனைத்து சாலைகளும் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனையடுத்து செள்கார்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது. அதனை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சியும் கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் அளித்துள்ளது.  இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் பழமையான கட்டிடத்தில் குடியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வீட்டின் உரிமையாளர்கள் கட்டிடம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் தற்போது ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவோருக்கு மக்களைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. ஏனென்றால் அமைதியாக இருக்கும் நமது தமிழகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் இப்படிப்பட்ட நோக்கம் நிறைவேற  மு.க. ஸ்டாலின் நிச்சயம் தடைக்கல்லாக இருப்பார். மேலும் தமிழகம்  அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |