நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி சமீபத்தில் டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் காசியை புதுப்பித்து சிறப்பாக மாற்றியதற்கு பிரதமர் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மோடியும் காசியில் அற்புத அனுபவம் உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷால் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்று கேள்வி எழுந்தது.
இது குறித்து தற்போது பதிலளித்துள்ள விஷால், பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதில் எந்த அரசியல் உள் நோக்கமும் கிடையாது. தாஜ்மஹாலை பார்க்கும்பொழுது எப்படி ஷாஜகானை நினைப்போமோ அதேபோல காசியை பார்க்கும் பொழுது மோடிக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது என்று கூறியுள்ளார்.