நம் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட சூழ்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடம் ஆர்வமில்லை. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான அளவு கோவாக்சின் தடுப்பூசி கைவசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிக்கான தேவை இல்லாததால் கோவாக்சின் உற்பத்தி பல்வேறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது.
இப்போது சுமார் 50 மில்லியன்(5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ம் வருடத்தின் தொடக்கத்தில் காலாவதி ஆகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த சுமார் 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக அந்நிறுவனம் சென்ற மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.