ஆதார் அட்டையைக்கொண்டு ட்விட்டரில் ப்ளூடிக் வசதி செய்துதர வேண்டும் என கங்கனா ரனாவத் ஆலோசனை வழங்கியுள்ளார். ட்விட்டரில் ப்ளூ டிக் வேண்டும் என்றால் மாதம் 9 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கரார்தனம் காட்டி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, பிரபலத்தை வைத்து மட்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வழங்குவது சரியல்ல என்று கூறியுள்ள அவர், இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அதனால் ட்விட்டர் கட்டணம் வசூலிப்பதும் தவறில்லை. இருப்பதிலேயே சிறந்த சோஷியல் மீடியா ட்விட்டர்தான் என இன்ஸ்டாகிராமில் கங்கனா பதிவிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் கணக்கு நிரந்தர தடையில் உள்ளது.
Categories