சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் கொத்தனாரான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். நேற்று முன்தினம் பூவேந்திரன் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறிய ரக எல்.இ.டி பல்பை விழுங்கியதால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விக்னேஷ் தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது, பூவேந்திரன் தற்போது நலமாக இருக்கிறான். எக்ஸ்ரே மூலம் பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்று பகுதியில் எல்.இ.டி பல்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.