Categories
அரசியல்

புற்றுநோய் அறிகுறிகள்… தெரிந்து கொள்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

சத்தம் இல்லாமல் நமது உடலில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக விளங்குகிறது. புற்றுநோய் வந்து விட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி தற்போது அதற்கான சிகிச்சைகள் வந்துவிட்டது. இருப்பினும் கூட மக்களிடையே புற்றுநோய் பற்றிய பயமும் பாதிப்பும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் இந்த நோயினால் ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடும் வழிமுறையை பற்றி இங்கே நாம் தெரிந்து கொள்வோம். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை பாதிக்கும் நோயை தான் நாம் புற்றுநோய் என கூறுகின்றோம். புற்றுநோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல ஆனால் அது ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, உணவு குழாய், ப்ராஸ்டேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளிலும் அதிகமாக புற்றுநோய் வருகின்றது.

எல்லா கட்டிகளுமே கேன்சர் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படுவதில்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றினால் மீண்டும் அவை தோன்றுவதில்லை. மேலும் அவை உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதில்லை சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிர் அணுக்கள் கட்டுப்பாடு இன்றி வளர்ந்து வருகிறது. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிகின்றது ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கு இவை பரவுகிறது. இதனால் உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவது எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

 

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.

உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தை பொறுத்து அதன் அறிகுறிகளும் மாறுபடுகிறது. கீழ்க்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம் அதனால் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லதாகும்.

  • குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு
  • முழுங்குவதில் தொடர் சிரமம் தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்.
  • நாக்கை அசைப்பதில் சிரமம்.
  • மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணமாக, தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
  • உடலில் கட்டி தோன்றுதல் புற்றுநோயில் ஆரம்ப காலகட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. ஆனால் அதை பரவிய பின் தான் வலி ஏற்படுகிறது.
  • உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரியதாகுதல் அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்.
  • காரணம் இல்லாமல் எடை குறைவு.
  • பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி மாதவிடாயின் போது இயல்பை விட அதிகமான ரத்தப்போக்கு இறுதி மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தப்போக்கு.

போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக காணப்படுகிறது.

Categories

Tech |