அறநிலைதுறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தில் பிறந்தவர் என்று உறுதிமொழி எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலை துறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த மனுவில் இந்து அறநிலைத்துறையில் வேலைக்கு சேர்பவர்கள் அறநிலைத்துறை சட்டத்தின்படி தெய்வங்கள் முன்பு நின்று உறுதிமொழி எடுக்காமல் பணிக்கு சேர்ந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல கட்ட விசாரணையை கடந்து இன்று விசாரணைக்கு வந்த போது இனிமேல் அறநிலை துறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் நான் இந்து மதம் என உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இனிமேல் இந்து மதத்தில் பிறந்தவர் , இந்து மதத்தை பின்பற்றுவோர் என உறுதிமொழி எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணையர் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் என்பதால் உறுதி எடுக்கவில்லை என்று அரசு சார்பில் பதிலளித்த நிலையில் நீதிமன்ற உத்தரவிட்டதால் இனி உறுதிமொழி எடுக்கும் விதிகள் பின்பற்றப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீதர் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.