பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா குலுங்கியது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.