Categories
அரசியல்

வேற லெவல்!!… 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமலஹாசன்…. குஷியோ குஷியில் ரசிகர்கள்….!!!!

கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் பிறந்தார். இவர் தனது சிறு வயது முதலே  நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களை கொண்ட நடிப்பிற்காக பரவலாக  அறியப்பட்டார். மேலும் இவர் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் எந்த முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், 10  தமிழக அரசு திரைப்பட விருதுகள், 4  ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் சிறந்த பிறமொழி படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றில் இவர் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடிகராக மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்மபூசன்  விருது  அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமலஹாசனிற்க்கு கௌரவம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும் கடந்து 2019- ஆம் ஆண்டு 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த இந்திய நடிகர்கள் மிகச் சிலரில் ஒருவரானார்.

இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960-ஆம் ஆண்டில் தமிழில் வந்த களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதி விருது பெற்றார். மேலும் அவர் அடிக்கடி விஜய் என்னும் இயக்குனரை சந்திப்பார். மேலும் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு மூன்றாம்பிறை  திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அடுத்த 5 ஆண்டுகளில் நாயகன் படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மீண்டும் ஒரு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில் இந்தியன் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதற்கு, சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்காக தயாரிப்பாளராக தேவர் மகன் படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் இதுவரை பழமொழிகளில் 232 படங்கள் நடித்து 19 பிலிம் பேர் விருதுகளையும், 8 மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். இதனையடுத்து 4  தேசிய விருதுகளையும், 1980-ல் கலைமாமணி விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. விருதுகளின் நாயகனான கமல் திரைத்துறையில் நுழைந்து 62 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் 63 இரவு கமலஹாசன் என்று 63YearsOfKamalism என்ற ஹேஷ்டேக்கு கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |