உலக அளவில் உள்ள பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு முக்கியமான உடல் பாதிப்பு என்றால் அது மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய். இந்த மார்பக புற்று நோயினால் உலக அளவில் 11.5 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பெண்கள் சிறிய வயதிலேயே வயதுக்கு வருவது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கட்டாயம் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பார்கள் தாய்மார்களும் புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். அதன்பிறகு மார்பக புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பது தான் என்று கூறப்படுகிறது. இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகமாக காணப்படுவதால் தான் பெண்கள் சிறிய வயதிலேயே வயதுக்கு வந்து விடுகிறார்கள். இந்நிலையில் சிறிய வயதில் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் 20 வயதுக்கு முன்னால் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் கண்டிப்பாக 20 வயதுக்கு பிறகு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
இதேபோன்று 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நிற்காவிட்டால் அவர்களும் கண்டிப்பாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் மார்பக புற்று நோய் வந்துவிடும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முறையாக வருடம் தோறும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் மோனோகிராபி டெஸ்ட் எடுத்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய உடம்பில் இருக்கும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம்.
மோனோகிராபி மூலம் உடலில் உள்ள சிறிய கட்டிகள், தழும்புகள் கூட தெளிவாக தெரியும் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை 30 வயதை கடந்த பெண்கள் மோனோகிராஃபி டெஸ்ட் மூலம் மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். முறையான மருத்துவ சிகிச்சை மட்டுமே மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும். மேலும் அக்கம் பக்கத்தினரின் பேச்சைக் கேட்காமல் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டாலே மார்பக புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.