Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “வாரிசு”…. இதுவரை இல்லாத அளவிற்கு விலைப்போன கேரளா ரைட்ஸ்… வேற லெவெல்ப்பா…!!!!!

விஜயின் வாரிசு திரைப்படத்தின் கேரளா உரிமை 6 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது.

இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். திரைப்படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலில் லிரிக் வீடியோ நேற்று முன் தினம் வெளியானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தின் கேரள உரிமம் ரூபாய் ஆறு கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களிலேயே இத்திரைப்படம் தான் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு கேரளாவில் அதிக திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Categories

Tech |