செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியை அடைத்திருக்கும் இலுப்பையூரணி தாமஸ் நகர் மேட்டு தெருவில் வசிக்கும் மைக்கேல் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகின்றார் இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் அப்பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் இதை பார்த்த அப்பகுதி மக்கள் கீழே வரும் படி திரண்டு நின்றார்கள் ஆனால் அவர் மறுத்துவிட்டார் இதை எடுத்து இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மைக்கேல் கூறியதாவது தாமஸ் நகர் பகுதியில் அமைப்பதற்காக தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள எட்டு அடி உயர அம்பேத்கர் வெங்கல சிலையை அமைக்க இடம் தேர்வு செய்து தருமாறும் சிலை அமைக்க அனுமதி தருமாறும் அவர் வலியுறுத்தினார். இதற்கு போலீச அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் ஆகையால் போராட்டத்தை கைவிட்டு விட்டு கீழே வரும்படி கூறினார்கள். இதன்பின் 12 மணியளவில் மைக்கேல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கீழே இறங்கினார் இதன் பின் போலீஸ் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.