நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கான விதிகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைப்படி மாற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் புதிய கல்விக் கொள்கை 2020ன் படி பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுகின்றது.
அதன்படி நிகர் நிலை பல்கலைக்களுக்கான 2019 ஆம் ஆண்டு விதிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு விதிகள் தயாராகியுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனத்தினர் தங்கள் கருத்துக்களை வருகின்ற நவம்பர் 18ஆம் தேதிக்குள் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம் மற்றும் வரைவு விதிகளை www.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் பெறலாம் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.