மாசி மகம் வெகு விமர்ச்சையாக கொண்டப்படுகிறது. இதனுடைய சிறப்பு மற்றும் பெண்கள் இந்நாளில் செய்யும் காரடையான் நோன்பு மகிமை..!!
மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். அந்த வகையில் வரும் 8.3.2020 ஞாயிற்றுக்கிழமை அதாவது மாசி 25ஆம் தேதி மாசிமகத்தன்று இறைவனை தரிசனம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும்.
எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. காரணம் அன்று மாசி பவுர்ணமி திதி நாளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக ஆழ்வார்கள். மிகுந்த சக்தியும், திறனும் படைத்தவர்களாக திகழ்வார்கள்.
மகம் பித்ருக்களுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட பல சிறப்புகளைப் பெற்ற நட்சத்திரம் ஆகும். பவுர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று, சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக்கூடிய நாளாகும்.
இம்மாதமும், பவுர்ணமியும் இணையும் மாசிமகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இன்நாள் சிறப்பான நாளாக தான் இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகு சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
காரணம் காரடையான் நோன்பு வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமனிடம் இருந்து கணவனை திரும்பப்பெற பெற்ற நோன்பு காரடையான் நோன்பு ஆகும். திருமணமாகாத பெண்கள் தங்களின் திருமணத்திற்கும், சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைப்பதற்கும் , இந்த நோன்பினை மேற்கொள்வார்கள்.
விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு ஆகும். மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்யத்தை புதிதாக மாற்றிக் கொள்வார்கள். அதாவது மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள்.
இந்த நோன்பின் போது தாலியை கழற்றி அதற்க்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். காரடையான் நோன்பு மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்கசுமங்கலி வரமருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் என்றும் அழைப்பார்கள்.