தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் குவிந்தது. தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் ராஷ்மிகா கலக்கி வருகிறார்.
இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தமன் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தில் முதல் பாடலான ரஞ்சிதமே சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த பாடலை இணையதளத்தில் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ரஞ்சிதமே பாடல் மற்றும் விஜயின் நடன ஸ்டெப் காப்பி என்று இணையதளத்தில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகாவையும் விட்டு வைக்கவில்லை. அதாவது கோவை சரளா ஒரு படத்தில் கவுண்டமணி செந்திலுடன் இணைந்து கரகாட்டக்காரி வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற கோவை சரளாவின் கெட்டப்பையும் நடிகை ராஸ்மிகாவின் கெட்டப்பையும் ஒன்றாக போட்டு 2 பேருமே கரகாட்டக்காரி தான் என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.