Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தையாக இருந்தால்…. பிரசவ கட்டணம் இல்லை…. 11 ஆண்டுகளாக அசத்தும் மருத்துவர்….!!!

புனேவைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ், மகப்பேறு மற்றும் பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகிறார். பிரசவத்தின் போது பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வசூலிக்காமல் சேவை செய்து வருகிறார் இவர். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 10 வருடங்களில் ஆறு கோடி பெண் சிசுக்கொலைகள் நம்முடைய நாட்டில் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற கொடுமைகள் குறிப்பிட்ட நாடு, மாநிலம், நகரம் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதுமாக இந்த கொடுமை அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது பல குடும்பத்தினர் குழந்தையை வந்து பார்க்க கூட தயக்கம் காட்டுகிறார்கள்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எனவே பெண் குழந்தைகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். இதனால் பெண் குழந்தைகளை காப்போம் என்று திட்டத்தை தொடங்கி பெண் குழந்தைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் மருத்துவ கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 11 வருடங்களில் 2,400 பெண் குழந்தைகளை இலவசமாக பிரசவித்துள்ளோம். மேலும் பெண் குழந்தை பிறந்து பிரசவித்த தாய்மார்கள் வீடு திரும்பும்போது அவர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |