Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு”…. அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில்…. செம ஹேப்பியில் மாணவர்கள்….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது‌. அதன் பிறகு மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  3 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழக அரசின் சார்பில் 2 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த பேருந்துகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பருவமழையின் போது கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அறிவுரைகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்கள் மற்றும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்கள் போன்றவற்றை போன்றவற்றை முறையாக ஆய்வு செய்து இடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‌

அதோடு பள்ளிகளில் இருக்கும் ஸ்விட்ச் போர்டுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் பள்ளி கட்டிடங்களில் மாணவர்களை உட்காருவதற்கு அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருக்கும் அரசு பள்ளிகளில் கண்டிப்பாக தண்ணீர் தேங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அமைச்சர் அன்பில் மகேஷின்  புதிய அறிவிப்பால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Categories

Tech |