தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் வாரிசு படத்தின் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை சங்கீதா ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாரிசு படம் குறித்து பேசினார். அப்போது, தளபதி விஜய் பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு படத்தில் நடிக்கிறார். வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான பேமிலி எண்டர்டைனராக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நல்ல மெசேஜ் கூட படத்தில் உள்ளது. சொல்லப்போனால் குடும்பமாக வந்து இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.