செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. இன்றைக்கு ஸ்டாலின் சர்வாதிகாரியா மாறுவேன்னு சொன்னாரு, எதுக்காக ? போதை பொருளை ஒழிப்பதற்காக…. போதை பொருளை ஒழிப்பதற்காக நீங்க சர்வாதிகாரியா மாறினால் நாங்களும் அதை வரவேற்கிறோம்.
ஆனால் எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிறையில் அடைப்பதற்காக நீங்கள் இப்படி ஒரு ஆட்சியை நடத்துவது என்பது, சர்வாதிகாரி ஆட்சி, மக்கள் விரோதாட்சி, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்களை திசை திருப்புகிறீர்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். நான் உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்.
எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு நடக்குது என்று யாராவது ஒருவர் நிரூபிச்சிட்டாங்கன்னா, அவங்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு. இல்லாத ஒன்றை.. தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு இருக்கு, ஹிந்தி திணிப்பு இருக்கு என சொல்லுறாங்க. தமிழ்நாட்டில் மத்திய அரசாங்கத்தினுடைய கல்வி கொள்கை, தமிழ் திணிப்புதான்.
தமிழ்நாட்டில் தாய்மொழி கல்வி தான் மத்திய அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு குறித்து அவதூறு பிரச்சாரத்தை இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.