கொடுமையிலும் கொடுமையானது பசி கொடுமை. இன்றளவும் உலகின் பல நாடுகளில் ஏராளமானவர்கள் பசி கொடுமையால் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் வருடம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந்தியா 101 வது இடம் என்ற மோசமான இடத்தை பெற்றுள்ளது. 2020 ஆம் வருடத்தில் இப்பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா அதை காட்டிலும் 2021 ஆம் வருடத்தில் மோசமான நிலைக்கு ஆனது.
குழந்தைகள் உரிய எடை இல்லாமல் இருப்பது 2014 ஆம் வருடம் 15. 1 சதவீதமாக இருந்தது. இருப்பினும் 2022 19.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல ஊட்டச்சத்து பற்றாக்குறையால் 2018 முதல் 2020ல் 14.6 சதவீதமாக இருந்தது. 2019 – 2021இல் 16.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வருடத்திற்கான பசி குறியீடு பட்டியலின்படி இந்தியா பசி கொடுமை பிரச்சனையில் பாகிஸ்தானை விட பின்தங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.