Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாலியல் வன்கொடுமை….. பிரபல கிரிக்கெட் வீரரை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி உத்தரவு.!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தனுஷ்க குண திலகாவை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற தனுஷ்க குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு. குணதிலகா கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக இடைநீக்கம் செய்வதுடன், அவரை எந்தத் தேர்வுக்கும் பரிசீலிக்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

மேலும், கூறப்படும் குற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் எடுக்கும், மேலும் மேற்கூறிய ஆஸ்திரேலிய நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த வீரருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு வீரரின் அத்தகைய நடத்தைக்கு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை ஏற்றுக்கொள்வதையும், சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு ஆஸ்திரேலிய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்பதையும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்த விரும்புகிறது.என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்ட தான் தனுஷ்க குணதிலகா அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்ட போது காயம் ஏற்பட்டதன் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து இவருக்கு பதிலாக அணியில் பண்டாரா என்பவர் சேர்க்கப்பட்டார். இவர் காயம் அடைந்தபோதிலும் ஆஸ்திரேலியாவில் அணிக்கு பக்கபலமாக இருந்தார். இலங்கை வீரர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் அவர் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இலங்கை அணி கடைசியாக இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது இதற்குப் பின்னர் தனுஷ்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது குறித்து போலீசார் கூறியதாவது, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா என்பவர் டேட்டிங் ஆப் மூலம் 29 வயதான பெண் ஒருவருடன் பழகி இருக்கிறார். இந்த சூழலில் கடந்த 2ஆம் தேதி ரோஸ் பே என்ற நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இது தொடர்பாக அனுமதியின்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அந்த பெண் புகார் அளித்ததன் பேரில் சிட்னி போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தனுஷ்கா குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |