சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழகம் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இலை தற்போது இரட்டை தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்தால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. பாஐகவும், ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றி வருகிறது.
அதனை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூடியவர்கள் என்றால் அது பட்டியலின மக்கள் மட்டும் தான். அவர்களையம் தன் பக்கம் இழுக்க பாஜக பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து சிறுத்தைகள் கட்சி ஒரு எஃகு கோட்டை. எனவே யாராலும் அசைக்கவே முடியாது. மேலும் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை பஞ்சுமிட்டாய் இயக்கம் என்று விமர்சித்த ராமதாஸை வாயடைக்க செய்த இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி என்று அவர் பெருமிதமாக பேசினார்.